'மேயாத மான்' படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கும் படம் 'ஆடை'. இதில், நடிகை அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அமலாபால் நடித்த 'ஆடை' ரிலீஸ் தேதி அறிவிப்பு - அமலாபால்
நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகி உள்ள 'ஆடை' படம் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தை விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போல் சமீபத்தில் வெளியான டீசரிலும் அமலாபால் ஆடையில்லாமல் நடித்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக, அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழு, படத்துக்கு ‘A' சான்றிதழ் அளித்துள்ளது.