தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமலா பாலின் ஆடைக்குத் தடை - amala paul

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான இன்று வெளியாகவிருந்த அமலா பாலின் ஆடை படம் பைனான்ஸ் சிக்கலால் தடையாகியுள்ளது.

அமலா பால்

By

Published : Jul 19, 2019, 2:01 PM IST

அமலா பால் நடித்து, 'மேயாத மான்' புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஆடை'. இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

ஆடை படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்த ஒரு காட்சி டீசரில் வெளிவந்தவுடன் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

ஆடை பட விழா ஒன்றில் அமலா பால் குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும்போது தன்னைச் சுற்றி 15 கணவர்கள் இருந்தது போல் உணர்ந்ததாகக் கூறினார்.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகவிருந்த ஆடை படம் பைனான்ஸ் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.

மேலும் இன்று அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்பட்டு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details