தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வேலைன்னு வந்துட்டா எந்த லெவலுக்கும் இறங்கும் வாரிசு நடிகை...! - ஜூனியர் என்.டி.ஆர்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் (R R R)படத்திற்காக நடிகை ஆலியா பட் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆலியா பட்

By

Published : Apr 10, 2019, 10:37 AM IST

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி ‘பாகுபலி’ படத்தை அடுத்து தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். மேலும் பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கனும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது.

இப்படத்தின் கதை, சுதந்திரத்துக்கு முன் நடந்த இரண்டு நிஜ ஹீரோக்களை பற்றியது ஆகும். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் தயாராகும் இப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் நாயகி ஆலியா பட் தெலுங்கு கற்றுக்கொண்டு வருகிறார். தெலுங்கு கற்பதற்காக தனியாக தெலுங்கு ஆசிரியரையும் அவர் நியமித்துள்ளார்.

தெலுங்கு கற்பது குறித்து ஆலியா கூறுகையில், ”தெலுங்கு மொழி நல்ல அருமையான மொழி. தெலுங்கு பேசுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இருப்பினும் இந்தப் படத்திற்கு நான் தெலுங்கு கற்பது மிக முக்கியம். தெலுங்கு எனக்கு தெரிந்தால்தான் இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கமுடியும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details