நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம், 'ஆர்.ஆர்.ஆர்.'. விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது.
ராஜமெளலி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது கரோனா தொற்று குறைந்துவரும் சூழலில், மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதில் நடிகை ஆலியா பட் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்படுகின்றன. இதனை அவர் தனது சமூக வலைதளங்களில் உறுதிசெய்துள்ளார்.
படப்பிடிப்பிற்காக தான் தயாராகும்போது எடுத்த காணொலியை வெளியிட்டு, மீண்டும் ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பில் எனக் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க:மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி?