பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்.). ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் படக்குழு 50 நாள்கள் இடைவெளி இல்லாமல், சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தனர்.