தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இணையத்தைக் கலக்கும் ரன்பீர்-ஆலியா ஜோடி! - alia bhatt ranbir kapoor new year vacation pictures

ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடியின் கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஹாட்டாக வலம்வருகின்றன.

ரன்பீர்-ஆலியா ஜோடி
ரன்பீர்-ஆலியா ஜோடி

By

Published : Jan 7, 2022, 5:57 PM IST

Updated : Jan 7, 2022, 6:35 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், காதல் இளவரசன் ரன்பீர் கபூரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாகச் சுற்றிவருகின்றனர். இவர்கள் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் சமீபத்தில் புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருந்தனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளன.

இதற்கிடையில் ஆலியா பட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரன்பீர் கபூர் கேமரா பதிவு செய்த தனது படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “என் அன்புக்குரியவரின் புகைப்படத் திறமையைப் பார்த்து வியக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் உறவில் இருந்துவருகின்றனர்.

இவர்கள் இருவரும் தங்களின் வரவிருக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் காதலித்துவந்தனர். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளின்போது பொது இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

பிரம்மாஸ்திரா படத்தில் அமிதாப் பச்சன், அக்கினேனி நாகார்ஜுனா, மௌனி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி - ஓடிடியில் அன்பறிவு!

Last Updated : Jan 7, 2022, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details