ஹைதராபாத்: ராஜமௌலியின் RRR படப்பிடிப்பில் பாலிவுட் நடிகை ஆலியா பாட் இணைந்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'RRR'. கரோனா சூழலால் ஒத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகை ஆலியா பாட் கலந்துகொண்டுள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்துவரும் டிவிவி நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆலியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராஜமௌலி சொல்லுவதை ஆலியா கேட்டுக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து RRR' திரைப்படம் உருவாகிவருகிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.