ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ‘வலிமை’. இப்படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறைவில்லை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன், மற்றும் ஜிப்ரான் இசை சேர்த்திருந்தனர்.
இரட்டை வேடத்தில் அஜித்
இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி தளத்தில் ஹிட்டடித்த ஸ்பானிஸ் வெப் சீரீஸ் மணி ஹெய்ஸ்ட் போல, இந்தியன் மணி ஹெய்ஸ்ட் படமாக இது இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்தை விரைவில் எடுத்து முடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மனைவியை பிரிந்தார் இயக்குனர் பாலா...