தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாராவின் சிரிப்பை ரசிக்கும் நிவின் பாலி! - nayanthara

மலையாளத்தில் உருவாகி வரும் 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில் நிவின் பாலியுடன், நயன்தாரா சிரித்து பேசும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நிவின் பாலி

By

Published : Jul 9, 2019, 3:10 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருக்கும் நயன்தாரா, ஈகோ பார்க்காமல் இளம் நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடிக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர். லோக்கல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் தோல்வி அடைந்தாலும் நயன்தாராவின் மார்கெட் சரியவில்லை என்றுதான் பட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடி, பிகில் படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் என தனக்கான உரிய பாணியில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்ந்து சோலோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாளத்தில் இளம் கதாநாயகனாக வரும் நிவின் பாலியுடன் 'லவ் ஆக்சன் டிராமா' என்னும் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். நகைச்சுவை நிறைந்த காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தினை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தினேஷ் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலியும், ஷோபா என்ற பெயரில் நயன்தாரா நடித்துள்ளார். 'லவ் ஆக்சன் டிராமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த சினிமா வட்டாரங்கள் தமிழில் பார்க்கும் நயன்தாராவாக இல்லை கேரளத்து பைங்கிளியாக சிரித்து மகிழ்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நயன்தாராவின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details