தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஷ்யாவிலிருந்து அஜித் சென்னை திரும்பாதது ஏன்? - Ajith in russia

நடிகர் அஜித் ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏன் சென்னை திரும்பவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்
அஜித்

By

Published : Sep 3, 2021, 10:34 AM IST

தல அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'வலிமை'. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றனர். சில ஆக்ஷன் காட்சிகள், பைக் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், அஜித் மட்டும் ரஷ்யாவில் இருந்து, திரும்பாமல் இருக்கிறார்.

இந்நிலையில் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், ரஷ்யாவில் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி உலகையே அவர் பைக்கில் சுற்றிப்பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்

இதன்மூலம் இந்திய நடிகர் ஒருவர் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்ற சாதனையை அஜித் படைக்கவுள்ளார். ஏற்கனவே அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக்கில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details