'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் 'வலிமை' படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அஜித் வருகை தந்தார். துப்பாக்கி சூடு பயிற்சி எடுக்கும் இடமான ரைபிள் கிளப் இங்கு அமைந்துள்ளதாக நினைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரைபிள் கிளப் பழைய ஆணயர் அலுவலகத்தில் இருப்பதையடுத்து அங்கு சென்றார். அதற்குள் அஜித்தை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.