தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித் சந்தித்த உலகப் பிரபலம்! - Ajith meets Maral Yazarloo in delhi

உலகை மோட்டார் பைக்கில் சுற்றுவந்த மாரல் யாசர்லூவை அஜித் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ajith-meets-maral-yazarloo-in-delhi
ajith-meets-maral-yazarloo-in-delhi

By

Published : Sep 20, 2021, 8:12 PM IST

சென்னை: மோட்டார் பைக் ரேஸ் மீது காதல் கொண்ட அஜித், உலகையே மோட்டார் பைக்கில் சுற்றிவந்த மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்துள்ளார்.

உலகம் முழுவதும் 7 கண்டங்கள், 64 நாடுகளுக்கு மோட்டார் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாரல் யாசர்லூ என்பவரை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்தார். அவருடைய பயண அனுபவம் குறித்து கேட்டறிந்த அஜித், விரைவில் மோட்டார் பைக்கில் தான் மேற்கொள்ளவுள்ள உலக சுற்றுப் பயணத்திற்கான வழிகாட்டுதல்களையும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அஜித் - யாசர்லூ சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் உலக சுற்றுப்பயணத்துக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரியங்கா சோப்ரா...கத்ரீனா கைப்பை கவர்ந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பாடல்

ABOUT THE AUTHOR

...view details