'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தை ஹெச். வினோத் இயக்கிவருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண அஜித் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
கிட்டதட்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் கடந்தும், இன்னும் படத்தின் அப்டேட் ஒன்று கூட வெளியாகவில்லை. அதனாலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள், கிரிக்கெட் மைதானம், பிரதமர் மோடியிடம் என தொடர்ச்சியாக வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.