தமிழ் சினிமா நடிகர்களில் வெகு சிலர் மட்டுமே நடிப்புக்காக மிகவும் மெனக்கெடுவார்கள். அதில் நடிகர் அஜித்துக்கு முக்கியமான இடம் உண்டு. திடீரென படத்துக்காக உடல் எடையை கூட்டுவார். பின்னர் வேறு படத்துக்காக மெலிந்த உடலுடன் வந்து நிற்பார். கடைசியாக ‘விவேகம்’ படத்துக்காக உடல் எடையை குறைத்தவர், ‘விஸ்வாசம்’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்திருந்தார்.
வினோத்தின் ரெக்வஸ்ட்.. அஜித்தின் ஒர்க் அவுட்..! - புதிய படத்தில் அசத்தல் லுக்! - h.vinoth
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் அசத்தல் லுக்கிற்காக அஜித் கடினமான ஒர்க்-அவுட்டை செய்து வருகிறார்.
தற்போது அதே உடல்வாகுடன் ஹெச்.வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த படத்துக்காக அஜித்திடம் உடல் எடையை குறைக்க சொல்லி கேட்டிருக்கிறார் ஹெச்.வினோத்.
‘என்னை அறிந்தால்’, ‘விவேகம்’ போன்ற கெட்டப்பில் இருக்க வேண்டும் என்பது வினோத்தின் ரெக்வஸ்ட். அதை ஏற்றுக்கொண்ட அஜித் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். வினோத் அடுத்ததாக அஜித்தை வைத்து இயக்க இருப்பது ஆக்சன் த்ரில்லர் கதைக்களம். அதற்காகதான் இத்தனை மெனக்கெடல். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகு விரைவில் ஸ்லிம்மான அஜித்தை பார்க்கப் போகிறார்கள் அவரின் ரசிகர்கள்.