தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வலிமை' வெற்றிபெற அஜித் ரசிகர்கள் செய்த 'வலிமை'யான செயல் - வலிமை வெளியாகும் தேதி

அஜித்தின் 'வலிமை' படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டி அஜித் ரசிகர்கள் பனை மரக் காதலர்கள் என்ற அமைப்புடன் இணைந்து 10 ஆயிரம் பனை விதைகளை நடவுசெய்தனர்.

Ajith
Ajith

By

Published : Sep 28, 2021, 12:46 PM IST

Updated : Sep 28, 2021, 1:03 PM IST

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 'வலிமை' அப்டேட் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் 'வலிமை' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. வீடியோவில் அஜித் ஸ்டைலாக மாஸ் லுக்கில் காணப்பட்டார். மேலும் வீடியோவில் அஜித் பேசிய கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி போன்ற வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

'வலிமை' படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், வலிமை மிகப்பெரிய வெற்றிபெற வேண்டி பனை விதைகளை நடவுசெய்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவுசெய்த பனை மரக் காதலர்கள் என்ற அமைப்புடன் இணைந்து அஜித் ரசிகர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 10 ஆயிரம் பனை விதைகளை நடவுசெய்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் இந்தச் செயல் தற்போது சமூக வலைதளத்தில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!

Last Updated : Sep 28, 2021, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details