கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக சென்னை மாநகரம் இந்தத் தொற்றினால் பெரிதும் சேதாரம் அடைந்துள்ளது. இதையடுத்து, பல திரை பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை கரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்துவருகின்றனர். இந்நிலையில் தொற்றின் தீவிரம் அறிந்த தக்ஷா குழு, ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனையில் ஈடுபட்டுவருகிறது.
இந்த தக்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக உள்ளார். தக்ஷா குழுவானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற World Unmanned Aerial Vehicle Medical Express Challenge போட்டியில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திவருகிறார்.