தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வலிமை' படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை
வலிமை

By

Published : Nov 5, 2020, 3:51 PM IST

'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'வலிமை'. ஹெச். வினோத் இயக்கிவரும் இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துவருகிறார்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் அஜித் காவல் துறை அலுவலராக நடித்துவருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது 'வலிமை' படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் அஜித், ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்-ஆக நடித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி ட்விட்டரில் #ஈஸ்வரமூர்த்திIps என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details