சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் படமாக்கிவந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தல்படி படப்பிடிப்பை பாதியுடன் நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியுள்ளது.
இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 'கோப்ராவுக்கு கொரோனா தாக்குதல். போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்' என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்வகையில் அமைந்துள்ளது. இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:விஷால் சொன்ன அந்த வார்த்தை; மிஷ்கினின் கோபம் - துப்பறிவாளன் 2 கை மாறிய காரணம்!