மும்பையில் அமைந்துள்ள தாராவி பகுதியில் சுமார் 6.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். அப்பகுதியில் வசிக்கும் 1,500 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக மருத்துவமனை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்து உதவிய அஜய் தேவ்கன்!
தாராவியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் அஜய் தேவ்கன் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து உதவி செய்துள்ளார்.
அஜய் தேவ்கன்
இந்நிலையில், நடிகர் அஜய் தேவ்கன் அவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளை தனது ஃபிலிம்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக வழங்கியுள்ளார். ஆம், அஜய் தேவ்கன் கோவிட்- 19 ஆல் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், இரண்டு வென்டிலேட்டர்களையும் கொடுத்துள்ளார். இவரின் இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.