’நீ தான் அவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பல்வேறு சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்துவந்த இவருக்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் தேடிவந்தன.
அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா தற்போது டாப் கதாநாயகிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ட்விட்டர் கணக்கை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.