பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது 'தாதா 87' பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு படக்குழு 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்று பெயரிட்டுள்ளது. இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப் பிரிவு உயர் அலுவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தாவின் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்'! இதுதான் கதையா...! - பிக்பாஸ்
நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் நடிப்பில் உருவாகிவரும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' கதை பற்றி படத்தின் இயக்குநர் தற்போது தெரிவித்துள்ளார்.
new film
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ, 'பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறாங்க. ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அப்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை' என்று அவர் கூறினார்.