சென்னை:நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து வாழப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவுசெய்திருந்த நிலையில், தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரிராஜா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். .
அதில், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள், பிரிந்து வாழப் போவதாக வந்த தகவல் தவறு. காலையில்கூட இருவரிடமும் பேசினேன் என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனுஷ் பெயரை நீக்காத ஐஸ்வர்யா இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும்விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருக்கிறார்.
தற்போது இவர்கள் இருவரது குடும்பங்களும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சும்மா குடும்ப சண்டைதான், விவாகரத்து அல்ல - கஸ்தூரி ராஜா விளக்கம்