தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்! - vijay63

சென்னை: தளபதி 63 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் அட்லீ, துணை நடிகைகளைத் தரக்குறைவாக நடத்துகிறார் என துணை நடிகை கிருஷ்ணதேவி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

against atlee complaint

By

Published : Apr 23, 2019, 5:46 PM IST

'மெர்சல்', 'தெறி' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு தளபதி 63 என தற்போதைக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

படத்தின் அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இயக்குநர் அட்லீ துணை நடிகைகளை தரக்குறைவாக நடத்துவதாக துணை நடிகை கிருஷ்ணதேவி காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த கிருஷ்ணதேவி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தளபதி 63 படத்தில் 15 நாட்கள் நடிப்பதற்காக, என்னை ஒப்பந்தம் செய்தனர். இதையடுத்து நஸ்ரத் பேட்டை அருகே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கு பிறர் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த சிக்கன் கறியை, என்னை உண்ண அட்லீ வற்புறுத்தினார்" என குற்றம்சாட்டினார்.

இயக்குநர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details