தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இப்போ தளபதி...அடுத்து சூப்பர் ஸ்டார்' - மோத தயாராகும் கார்த்தி! - ஜீத்து ஜோசப்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' வெளியாகும் தேதியன்று கார்த்தி நடித்த புதிய படமும் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

karthi

By

Published : Sep 26, 2019, 9:56 AM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையும் கார்த்தியின் அண்ணியுமான ஜோதிகாவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ ரீலிஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதே தீபாவளியில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'பிகில்' திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்யின் தீவிர ரசிகை நான்...அஜித் விடியோவுக்கு பிறகு அலிஷாவின் அடுத்த அப்டேட்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details