தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜோதிகா...கீர்த்தி சுரேஷை பின் தொடர்ந்த 'நிசப்தம்' அனுஷ்கா? - ஜோதிகாவின் பொன்மகள் வந்தால்

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' படம் விரைவில் OTTயில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

anushka
anushka

By

Published : May 18, 2020, 3:30 PM IST

கரோனா வைரஸ் தொற்று, அதன் காரணமாக அடுத்து அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கரணமாக படப்பிடிப்பும் படத்தின் வெளியீடும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது பல தயாரிப்பாளர்களை OTT தளத்தில் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்ய வைத்துள்ளது.

வெளியீடு தாமதம் காரணமாக நிதி பிரச்னைகளை சந்தித்து வரும் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படத்தை OTTயில் வெளியிடுவதன் மூலம் அதிலிருந்து விடுப்பட்டு வருகின்றனர்.

தமிழில் ஜோதிகாவின்'பொன்மகள் வந்தாள்'திரைப்படமும் கீர்த்தி சுரேஷின்'பெண்குயின்'திரைப்படமும் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' திரைப்படமும் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்த படம் கரோனா அச்சம் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆன்லைனில் இப்படம் வெளியாகும் என சமூகவலைதளத்தில் பரவி வந்த வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. இருப்பினும் இப்படத்தை அமேசான் பிரைம் பெரிய விலைக்கு வாங்கிவிட்டதாகவும் விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'நிசப்தம்' வதந்திகளை நம்பாதீர்கள் - தயாரிப்பு தரப்பு

ABOUT THE AUTHOR

...view details