இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாக திரையுலகினரைச் சேர்ந்த பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அப்தாப் சிவதசனிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் எனக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன்.
துரதிர்ஷ்டவசமாக, எனக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.