தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"சின்ன சியான் வேற லெவல்"- வைரலாகும் 'ஆதித்யா வர்மா' படத்தின் முதல் பாடல்! - துருவ்

துருவ் விக்ரம் நடிக்கும் "ஆதித்யா வர்மா" படத்தின் முதல் லிரிக்கல் பாடலான,"எதற்கடி வலி தந்தாய்...?" பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

"எதற்கடி வலி தந்தாய்"

By

Published : Aug 16, 2019, 10:33 PM IST

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் "ஆதித்யா வர்மா" படமானது, தெலுங்கில் "விஜய் தேவரகொண்டா" நடிப்பில் வெளியாகிய 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமெக் ஆகும்.

இந்தப்படத்தை இயக்குநர் கிரீசயா இயக்கியுள்ள நிலையில், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவுப் பணியை கையாண்டிருக்கிறார். 'E4 எண்டெர்டெய்ன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார்.

ஆதித்யா வர்மா படத்தின் முதல் பாடல்!

இதனிடையே இப்படத்தில் வரும்"எதற்கடி வலி தந்தாய்" என்ற பாடலை, ஹீரோ துருவ் விக்ரம் பாடி அசத்தியுள்ளார்.

தற்போது இந்த லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடல் மிகவும் ரொமான்டிக்காக இருப்பதால், காதலர்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details