இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழில் தனது மகன் துருவ் விக்ரமிற்கு முதல் படத்தில் மிகப்பெரிய பிரேக் கொடுக்க விரும்பிய விக்ரம் பாலாவை வைத்து அர்ஜீன் ரெட்டியை ரீமேக் செய்ய முடிவெடுத்தார். இப்படம் 'வர்மா' என்ற பெயரில் உருவானது. 'வர்மா' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் தருணத்தில் அத்திரைப்படம் ஈர்க்கவில்லை எனக் கூறி அப்படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.
காதல் பிரிவால் வாடும் துருவ் விக்ரம்! - grisayya
துருவ் விக்ரம் நடித்துள்ள 'ஆதித்யா வர்மா' படத்தில் இடம்பெற்றுள்ள 'எதற்கடி... என் சுவாசம் நீயே' சிங்கிள் டிராக் ரசிகர்களின் காதல் கீதமாக ஒலிக்க இருக்கிறது.
இதனையடுத்து இயக்குநர் சந்தீப் வங்காவின் உதவி இயக்குநர் கிரிசய்யா ’ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சமீபத்தில் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
டீசரில் துருவ் விக்ரமின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அப்படியே அர்ஜூன் ரெட்டியை பார்த்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், துருவ் விக்ரம் காதல் பிரிவில் பாடும் 'எதற்கடி என் சுவாசம் நீயே...' சிங்கிள் டிராக் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.