தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட யாஷிகா - latest kollywood news

நடிகை யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஷிகா
யாஷிகா

By

Published : Jul 30, 2021, 5:49 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) ஈசிஆர் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் வேகமாக சென்று, நிலை தடுமாறி சாலையின் தடுப்பின் மீது மோதினார்.

இந்த விபத்தில் அவரின் தோழி ஹைதரபாத்தைச் சேர்ந்த வள்ளி ஷெட்டி பவானி (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகா, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக கார் ஓட்டிய யாஷிகா ஆனந்த் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மரணத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வாகன ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய யாஷிகா

ABOUT THE AUTHOR

...view details