நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதால், இந்த திருமணத்திற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வனிதாவின் கணவருக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி! - வனிதா கணவர்
நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
vanitha
இருப்பினும் நடிகை வனிதா-பீட்டர் பால் போரூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர்.
இந்நிலையில் வனிதாவின் கணவருக்கு நேற்று(ஆக.24) இரவு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.