கிருஷ்ணர் உங்கள் பதட்டங்களை போக்கி அமைதியை தருவார் - நடிகை சுஜா வருணி - கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறிய சுஜாவாருணி
சென்னை: கிருஷ்ணர் இந்த ஜன்மாஷ்டமியில் உங்கள் பதட்டங்களையும் கவலைகளையும் போக்கி உங்களுக்கு எல்லா அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவார் என நடிகை சுஜா வருணி கூறியுள்ளார்.
தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
இவரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவும் 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அத்வைத் என்ற மகன் பிறந்தான்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) தனது மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு சுஜா தனது வீட்டில் மகிழ்ச்சியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியுள்ளார்.