தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர் விஜய், பிரசாந்த், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய சிம்ரன் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.
1995ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக சனம் ஹர்ஜாய் என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1996 இல் வெளியான தேரே மேரே சப்னே படம்தான் முதல் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானார். நடிப்பு, நடனம் என பன்முக திறமைக் கொண்ட சிம்ரனுக்கு தமிழ் சினிமா இடையழகி என்ற பட்டப்பெயரை கொடுத்தது.