இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் கமல் ஹாசன், வடிவேலு ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டனர்.
இந்நிலையில் நடிகை ஷெரின் தனக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் அவரது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அறிகுறிகளுடன் வந்துள்ளது. காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட வலிகளுடன் வந்துள்ளது.