தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தாயாக முதல் பிறந்தநாள்... HBD சாயிஷா! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை சாயிஷா இன்று (ஆக.12) தனது 25ஆவது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடி வருகிறார்.

சாயிஷா
சாயிஷா

By

Published : Aug 12, 2021, 7:54 AM IST

Updated : Aug 12, 2021, 8:57 AM IST

'அகில்' என்ற தெலுங்கு படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பிறகு பாலிவுட்டில் ’சிவாய்’ படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு, இந்தி மொழிகளைத் தொடர்ந்து இவர் தமிழில் 2017ஆம் ஆண்டு 'வனமகன்' படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல பெயர் கிடைத்தவுடன் தமிழ் மொழி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிறகு ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் சாயிஷா நடித்தார்.

சாயிஷா

ஆர்யாவுடன் காதல்:

ஆர்யா - சாயிஷா முதன்முறையாக இணைந்து நடித்த ’கஜினிகாந்த்’ படத்தின் மூலம் இவர்கள் இருவரும் காதலில் விழுந்தனர். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆர்யா - சாயிஷா

திருமணம் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'டெடி' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

தாயாக முதல் பிறந்தநாள்

ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு சென்ற ஜூலை 23ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. நடிகை சாயிஷா இன்று (ஆக.12) தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தாயான பிறகு இவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

குஷியில் ஆர்யா

ஆர்யா - சாயிஷா

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றி, பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி, சாயிஷா பிறந்தநாள் என செம குஷியில் இந்த நாளைக் கொண்டாட ஆர்யா திட்டமிட்டுள்ளார்.

Last Updated : Aug 12, 2021, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details