கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' இப்படத்தில் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பழம்பெரும் நடிகை சச்சு ஷில்பாவின் பாட்டியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு, தான் நடித்த அனுபவம் குறித்தும், தனது சினிமா பயணம் பற்றி விவரித்து பேசியுள்ளார். இதில், 'எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
இதுவரை நடிக்காத கேரக்டர் 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' - பழம்பெரும் நடிகை சச்சு பெருமிதம் - sachu amma
'எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டர் கிடைத்துள்ளது' என்று பழம்பெரும் நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இளம் இயக்குநர்கள், உங்களுக்கென்று ஒரு கதாபாத்திரம் இருக்கு சச்சு அம்மா, அதில் நீங்க நடித்தால் பிரமாதமாக இருக்கும் என்று கூறும்பொழுது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் இப்போதைய கலைஞர்களுக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொள்கிறேன். அதனால்தான் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. படத்தில் தன்னால் நடிக்க முடிந்தது. இத்தனை வருட காலத்தில் தான் நடிக்காத கேரக்டர் இது' அறிவியல் கதை என்றாலும் அலுப்பு தட்டாமல் நகைச்சுவையுடன் அனைவரும் ரசித்து பார்க்கும் திரைப்படமாக இது இருக்கும்' என பெருமிதத்துடன் தெரிவித்தார்.