சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'இறுதிச்சுற்று'. பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் பாக்ஸரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக படத்தில் பாக்ஸராக கலக்கியிருந்த ரித்திகா சிங், ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து 'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா' உள்ளிட்ட தமிழ்படங்களிலும் ரித்திகா சிங் நடித்தார். தற்போது அவர் அருண் விஜய் உடன் 'பாக்ஸர்', அசோக் செல்வன் உடன் 'ஓ மை கடவுளே' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.