தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சரிலேரு நீக்கெவரு' திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' விஜயசாந்தி, 'கீதா கோவிந்தம்' படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, பிரகாஷ் ராஜ், சச்சின் கெடேகர், பிரதீப் ராவத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அனில் ரவிப்புடி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே படத்தின் நாயகியான ராஷ்மிகா, 'சரிலேரு நீக்கெவரு' படத்திற்காகதான் டப்பிங் செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.