'ஜோக்கர்', 'ஆண் தேவதை' உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தவர், ரம்யா பாண்டியன். இதில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்திருந்த போட்டோஷூட் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கினார். மேலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர் பட்டாளத்தை ஆர்மியாக மாற்றினார்.
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ரம்யா பாண்டியன்! - கரோனா தடுப்பூசி
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் இன்று (மே 21) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சென்றார். தற்போது இவர் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், ரம்யா பாண்டியன் சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று (மே 21) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
கரோனா தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பூசி உள்ளது. இதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.