பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (மே17) 11 மணியளவில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்நிலையில் அவரது மறைவிற்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை - பிரியா பவானி சங்கர் - கி.ரா.வின் சிறுகதைகள்
சென்னை: கி.ரா.வின் சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனதில் பதிய வைத்தது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என பிரியா பவானி சங்கர் எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நடிகை பிரியா பவானி சங்கர் எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, " கி. ராஜநாராயணன்... தமிழில் பேசினால் அபராதம் என கிளாஸ் லீடரைப் பெயர் எழுதச் சொல்கிற பள்ளியில் 14 வருடங்களாக ஆங்கிலத்திலேயே சிந்திக்கப் பழக்கப்பட்டோம். அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு தனியார் நூலகரின் பரிந்துரையில் 'கோபல்ல கிராமம்' மூலம் அறிமுகமானவர், தான் கி.ரா.
பிறகு 14,15 வயதில் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்கிற பெயர் நம்மை ஈர்க்க, ஒரு குறுகுறுப்புடன் அதை நூலகரின் அருகில் வைத்த என்னை நினைத்தால், எனக்கே சில சமயம் வெட்கமாக இருக்கும். அதன்வழி கி.ரா. இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனதில் பதிய வைத்தது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்போதும் என்னைப் புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை" இவ்வாறு பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.