தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய மாடர்ன் நாயகி!

மாடர்ன் கேர்ள் குத்துப் பாடல்கள் என கவர்ச்சியுடன் நடித்து வந்த பூஜா ஹெக்டே, 'வால்மீகி' என்ற படத்தில் பாவாடை தாவணி அணிந்து முற்றிலும் கிராமத்து பெண்ணாக மாறியுள்ளார்.

Actress Pooja Hegde

By

Published : Aug 26, 2019, 7:36 PM IST

Updated : Aug 26, 2019, 8:05 PM IST

சென்னை: 'ஜிகர்தண்டா' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வரும் 'வால்மீகி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வால்மீகி படத்தில் பூஜா ஹெக்டே

கடந்த 2014ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேங்ஸ்டர் காமெடி படம் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். படத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த்தும், கதாநாயகியாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். சேது என்ற வில்லத்தனம் மிகுந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இதற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். மேலும், சிறந்த எடிட்டிங்குக்காகவும் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், 'ஜிகர்தண்டா' தெலுங்கில் 'வால்மீகி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக அதர்வா நடிக்கிறார். இப்படம் மூலம் தெலுங்கில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி சிம்ஹா கேரக்டரில் தெலுங்கு ஹீரோ வருண் தேஜ் நடிக்கிறார். படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சிங்கிள் டிராக் பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது படத்தில் ஹீரோயினாக வரும் பூஜா ஹெக்டே தனது கேரக்டர் குறித்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி என்ற கேரக்டரில் வரும் அவர், பாவாடை தாவணி அணிந்தவாறு சைக்கிள் ஓட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, எனது இதயத்திலிருந்து உங்களுக்காக ஸ்ரீதேவியை அழைத்துவந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தெலுங்கில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, இந்தப் படத்தில் முழு கிராமத்து பெண்ணாக மாறியிருக்கிறார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கப்பர் சிங், டிஜே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி ஷங்கர் 'வால்மீகி' படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசை - மிக்கி ஜே மேயர். ஒளிப்பதிவு - அயநன்கா போஸ்.

டோலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் செப்டம்பர் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Last Updated : Aug 26, 2019, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details