தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா! - நடிகை பூஜா ஹெக்டே

சென்னை: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Pooja Hegde
Pooja Hegde

By

Published : Apr 26, 2021, 8:49 AM IST

மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான படம் 'முகமூடி'. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். பூஜா ஹெக்டே தற்போது விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 65' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பூஜா ஹெக்டே தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரது சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், "அனைவருக்கும் வணக்கம், எனக்கு கரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் இருந்துவருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. தற்போது நன்றாக இருக்கிறேன். தயவுசெய்து எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் கரோனாவிலிருந்து பூஜா ஹெக்டே விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details