தரணி இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விக்ரமின் தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக வந்து கலக்கி, தமிழ்த்திரையுலகில் பெரும் புகழைப் பெற்றவர் கலைமாமணி விருது வென்ற பரவை முனியம்மா.
"சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி..." என்ற ஒற்றைப் பாடலின் மூலம், தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தக் குரலையுடைய நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா, நடிகர் விவேக்குடன் இணைந்து கலக்கிய 'காதல் சடுகுடு' திரைப்படத்தின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்.
தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துவந்த நடிகை பரவை முனியம்மாவிற்கு, மெல்ல சினிமா வாய்ப்புகள் குறைந்தும், அதேசமயம் உடல்நலன் குன்றியும் வந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ஆறு லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், மாதந்தோறும் 6,000 ரூபாய் உதவித்தொகையும் தமிழக அரசின் சார்பில் வழங்க உத்தரவிட்டார்.