நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் நாடு முழுவதும் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படதில் ரஜினிக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ’இந்த படத்தில் இரண்டு வினாடிகள் உள்ள ஒரு காட்சிக்காக இரண்டு விமானங்களில் பயணித்து ஒரு மணிநேர செலவு செய்து இரவு பகல் தங்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.