'பளுங்கு கீதா' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனையடுத்து தமிழில் ஒருநாள் ஒருகனவு என்ற படத்தில் நடித்தார்.
தொடர்ந்து படங்கள் ஒரு பக்கம் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் என சிறு வயதிலேயே தனது முழு திறமையையும் காண்பித்தார். பின்னர் நேரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு என ஒரு கூட்டம் உருவானது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜா ராணி படத்தில் ஆர்யாவின் காதலியாக நடித்திருந்தார். 'பிரதர் எனக்கு already ஆள் இருக்கு' என அவர் கூறிய வசனம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறும்புத்தனமான செயல், சுட்டித்தனமான பேச்சு என நடித்து பல இளைஞர்களின் மனதை திருடிச் சென்றார்.
படத்தில் நஸ்ரியாவுக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக அருமையான கதாபாத்திரம் என்பதால் எளிதில் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதாக பெற்றார். அந்த வகையில் 'நையாண்டி', 'திருமணம் எனும் நிக்காஹ்' என அடுத்த அடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் பட்டியலில் நுழைந்தார்.