தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சின்னத்திரையில் சாதிப்பாரா! லேடி லயன் நயன்தாரா - சின்னத்திரை

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி மார்க்கெட் வைத்திருக்கும் நடிகை நயன்தாரா பிக்பாஸ்-3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

By

Published : Apr 21, 2019, 8:03 PM IST

தமிழ் சினிமாவின் புகழுச்சியில் இருக்கும் நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் நடுவராக வருகின்றனர். ஒரு சிலர் புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர். அந்த வகையில், கமல், விஷால், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி ஆகியோர் போன்று தற்போது நயன்தாராவும் களம் இறங்கியுள்ளார்.

நடிகை நயன்தாரா சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறார். நல்ல நல்லக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. திரைச்சீலையில் கம்பீரமான தோற்றத்தில்கண்டிப்பான பெண்ணாக வரும் நயன்தாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதேபோல் குரலை உயர்த்தி பிறருக்கு கட்டளையிட்டு பேசும் அளவிற்கு நாட்டாமை செய்வாரா என்பது ரசிகர்களின் யூகத்திற்கே விட்டுவிடலாம்.

தற்போது, நயன்தாரா சின்னத்திரையில் வர இருப்பது போன்ற புரோமோ காணொளி வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details