சென்னை:நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர். கூழாங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கவுள்ளார்.
இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், " மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளத் தோன்றும், அப்படி ஒருநாளாக இறுதிகட்ட பணிகளில் இருக்கும் கூழாங்கல் எனும் படத்தை பார்த்தபோது தோன்றியது.