தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நதியா. இந்த படத்தில் கிடைத்த வரவேற்பையடுத்து நதியா தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் 'நதியா பேஷன்' என ட்ரெண்ட் செட் செய்தார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா 1994ஆம் ஆண்டு வரை படங்களில் நடித்து வந்தார்.
அதன் பின் நதியா திரையில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்து கொண்டார். பின் மீண்டும் 2004ஆம் ஆண்டு 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது வரை தொடரந்து நடித்து வருகிறார்.
சமூகவலைதளப்பக்கத்தில் கணக்கைத் தொடங்கிய நதியா அவ்வப்போது தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் அப்போது பார்க்க நதியா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே தான் இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். நதியாவுக்கு 25, 20 வயதுடைய இரண்டு மகள் உள்ளனர்.