தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக வலைதளத்தில் பொய் தகவல்கள் பரப்பிய இயக்குநர்: அசுரன் பட நடிகை டிஜிபியிடம் புகார் - Actress Manji warrier latest updates

தன்னைப் பற்றி பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிவருவதாக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் என்பவரின் மீது பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கேரள டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

Actress Manju Warrier

By

Published : Oct 22, 2019, 10:05 PM IST

சமீபத்தில் நடிகர் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகையும் பிரபல மலையாள முன்னணி நடிகைகளுள் ஒருவருமான மஞ்சு வாரியர், தற்போது இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் என்பவரின் மீது புகார் செய்துள்ள சம்பவம் மலையாள, தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள டிஜிபி லோக்நாத் பெஹேராவிடம், ஸ்ரீகுமார் மேனன் தொடர்பாகப் புகார் அளித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலின் பெயரையும் இந்தப் புகாரில் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பற்றியும் தன் நண்பர்கள் பற்றியும் பொய்யான பல தகவல்களை சமூக வலைதளங்களில் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் பரப்பிவருவதாகவும் அவரால் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ள மஞ்சு வாரியர், தனது கையெழுத்தோடு கூடிய காசோலைகளை ஸ்ரீகுமார் தவறாக உபயோகித்ததற்கான ஆதாரங்களையும் மேலும் சில டிஜிட்டல் ஆதாரங்களையும் டிஜிபி லோக்நாத் பெஹேராவிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷுடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியடைந்து, 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சமீபத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சாகடித்தப்பா என்ன! - மேடையில் வெறுப்பேற்றிய தந்தை விக்ரமிடம் டென்ஷனான துருவ்

ABOUT THE AUTHOR

...view details