சமீபகாலமாக ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டாகி கொண்டிருப்பது ஃபேஸ் ஆப் (Face App) சேலஞ்ச். இந்த ஃபேஸ் ஆப் செயலி மூலம் அனைவரும் தங்களது புகைப்படங்களை வயதான தோற்றம், இளமையான தோற்றம், ஆண் மற்றும் பெண் தோற்றம் என மாற்றி பகிர்ந்துவருகின்றனர்.
'நான் ஆணாக இருந்தாலும் மோசமில்லை' - குஷ்புவின் ஃபேஸ் ஆப் புகைப்படம் - ஆணாக மாறிய குஷ்பூ
சென்னை: ஃபேஸ் ஆப் மூலம் நடிகை குஷ்பு தன்னுடைய முகத்தை ஆணாக மாற்றிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
குஷ்பூ
திரைப் பிரபலங்களும் இந்த சேலஞ்சில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், நடிகை குஷ்பு தன்னுடைய முகத்தை ஆணின் முக அமைப்புக்கு மாற்றிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ஆணாக இருந்தாலும் மோசமாக இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.