தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னது உதயநிதிக்கு இவர் ஜோடியா? - உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jan 3, 2022, 5:24 PM IST

'கர்ணன்' படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

நகைச்சுவைப் படங்களை மட்டும் தேர்வுசெய்து நடித்துவந்த உதயநிதி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு சமூகத்திற்குக் கருத்துச் சொல்லும் படங்களில் நடிக்க விருப்பம் காட்டுகிறார்.

அந்த வகையில் இயக்குநர் அருண்ராஜ் காமராஜா இயக்கிவரும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் காவலராக நடித்துவருகிறார். இந்தியில் வெளியான 'ஆர்டிகள் 15' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிவருகிறது.

அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதற்குப் பிறகு மாரி செல்வராஜ் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். ஏற்கனவே, இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் இதில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'வாத்தி' கம்மிங்... தனுஷின் புதிய அவதாரம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details